ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

   ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 2  பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து விதமான ஆய்வு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் உடனடியாக நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஒரு பணியாளரின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததால் அது மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.