“கேள்விகள் ஆயிரம்”

“கேள்விகள் ஆயிரம்”
“கேள்விகள் ஆயிரம்”
“கேள்விகள் ஆயிரம்”
“கேள்விகள் ஆயிரம்”

“கேள்விகள் ஆயிரம்”


ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது “கேள்விகள் ஆயிரம்” விவாத நிகழ்ச்சி

அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சமில்லாதது. தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்புகளை உள்வாங்கி, துல்லியமான கேள்விகளுடன், துடிப்பான விவாதங்களுடன் அலசுகிறது இந்நிகழ்ச்சி.

இதில் அரசியல், பொருளாதாரம், அன்றைய தினத்தின் பரபரப்பான நிகழ்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

தலைமை செய்தி ஆசிரியரின் மேற்பார்வையில் அன்றைய தினத்தின் சரியான தலைப்பை தேர்ந்தெடுத்து, அதன் பல்வேறு பரிணாமங்களை ஆராய்ந்து விவாதம் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் கொடுக்கிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பெருமாள்மணி. நிகழ்ச்சியை பிறழாமல் நெறிப்படுத்தி எடுத்துச் செல்கிறது நீண்ட நெடிய ஊடக அனுபவம் கொண்ட நெறியாளர் குழு.  

மக்களின் குரல்களையும், விமர்சனங்களையும் கேள்விகளாக்கி அரசியல்வாதிகளின் முன் தர்க்கமான வாதங்களை வைத்து நிகழ்ச்சியை பரபரப்புடன் நகர்த்துகின்றனர் நெறியாளர்கள் வெங்கடேஷ், சண்முகவேல் மற்றும் சுபியான்.