'இது மக்கள் போராட்டம் அல்ல... இடைத்தரகர்கள் தூண்டிவிடும் போராட்டம்' - குஷ்பு கருத்து
மதுரை: பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்க்கிறது என குஷ்பு தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இடைத்தரகர்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி கிடைக்கும் என்பதால் போராட்டம் நடைபெறுகிறது. இது மக்கள் போராட்டம் அல்ல... இடைத்தரகர்கள் தூண்டிவிடும் போராட்டம். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது; பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்க்கிறது. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,500 வரவேற்கத்தக்கது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்குவது தவறு அல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்கும் என கூறினார். தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியதற்கும் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை மட்டுமே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.