நவ..10ம் தேதி தியேட்டர் திறப்பு...தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு திருப்பூர் சுப்ரமணியம்
நவ..10ம் தேதி தியேட்டர் திறப்பு...தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் : 'தமிழகம் முழுவதும் வரும், 10ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கும்' என, தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா ஊரடங்கில், மேலும் சில தளர்வு குறித்து நேற்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். அதில், 10ம் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள், வரும் 10ம் தேதி முதல் இயங்கும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 1,112 தியேட்டர்கள் திறக்க உரிய ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 169 தியேட்டர்கள் வரும் 10ம் தேதி முதல் இயங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.