வேலம்மாள் பள்ளியில்  72 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது.

வேலம்மாள் பள்ளியில்  72 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது.
வேலம்மாள் பள்ளியில்  72 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது .

வேலம்மாள் பள்ளியில்  72 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது .

வேலம்மாள் நெக்ஸஸ்
குழுமத்தின் சார்பில் 72 வது குடியரசு தினம் உற்சாகத்துடனும், தேசபக்தியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்பட்டது.
இது 2021 ஜனவரி 26 அன்று காலை 10:30 மணிக்கு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த மெய்நிகர்  குடியரசு நாள் விழா வேலம்மாள் குழுமத்தின் கெளரவ விருந்தினர்களால் தலைமை தாங்கப்பட்டது. ஊரக கைத்தொழில் அமைச்சர்
பி. பெஞ்சமின்  மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. எம். மனோகர் (ஐ.பி.எஸ் ) ஆகியோர் பார்வையாளர்களை அவர்களின் உந்துதல் வார்த்தைகளால் உரையாற்றி உற்சாகப்படுத்தினர். வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடி ஏற்று விழாவில்  கலந்து கொண்ட மேல்நிலை வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினர்.
தொடர் தேசபக்திப் பாடல்கள் மற்றும் உரைகளின்  மூலம் தேசபக்தியின் உற்சாகம் நன்கு வெளிப்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராளிகள் மற்றும் தியாகிகளுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டபோது விழா ஒரு உற்சாகமான திருப்பத்தை எடுத்தது. இறுதியாக, அது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்த உரையுடன் நிறைவடைந்தது. வேலம்மாளில் நடந்த மெய்நிகர் கொண்டாட்டம், அன்னை இந்தியாவுக்கு மரியாதை செலுத்தி அதன்
 மகிமை, மற்றும் மகிழ்ச்சியினை மாணவர்கள் அறிந்து கொள்ளும் ஒரு நாளாக அமைந்தது.