கல்லணையில் ரூ.90 கோடியில் பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்..!!

குருவை சாகுபடிக்காக வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் மதகுகளை புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதை ஒட்டி கல்லணையில் மதகுகளை சீரமைக்கும் பணியில், கரைகளை பலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தஞ்சையில் இருந்து கடலூர் வரை ரூ.90 கோடி மதிப்பில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் நடப்பாண்டு கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என்றார். வரும் 8ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் அதற்குள் கல்லணையில் மதகுகள் சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றும் நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்தார். இதனிடையே வரும் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.