இந்திய வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ‘தி சென்டியன்ட் சம்மிட்’

இந்திய வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ‘தி சென்டியன்ட் சம்மிட்’

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மிக அதிக அளவிலான இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் இதயநோய் சிகிச்சை வல்லுநர்கள் ஒன்றாக இணைந்து விவாதிக்கின்றனர்: மாறிவரும் நவீன மருத்துவ உலகில் எந்த மாதிரியான நவீன சிகிச்சைகள் இதயநோயாளிகளுக்கு மிகச்சிறந்ததாக அமையும் என்பது குறித்து ஆலோசித்து, விவாதித்து, ஆழந்து ஆராய இவர்கள் ஒன்று கூடுகின்றனர்

சென்னை, ஜூன் 6, 2019:- ஆங்கிலத்தில் ‘தி சென்டியன்ட் சம்மிட்’ [The Sentient Summit] என்று கூறப்படுவதை ஆழ்ந்து உணர்ந்து அறிந்து செயல்படுதலுக்கான உச்சி மாநாடு என்று தமிழில் கூறலாம். இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இந்த சிறப்பு பயிலரங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட இதய நோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவைசிகிச்சை வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் குறித்து ஆலோசித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவுள்ளனர். பாரம்பரியமாக வால்வு நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போது நவீன இதய நோய் சிகிச்சை தொழில்நுட்பத்தில் வால்வு சிகிச்சைகள் டிரான்ஸ்கேதடர் நடைமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சென்டியன்ட் சம்மிட் எனப்படும் ஆழந்து உணர்ந்து செயல்படுதலுக்கான உச்சமாநாடு – 2019-ன் முக்கிய நோக்கமே வால்வு சிகிச்சைகளை குறைந்த துளையிடுதல் அல்லது ஊடுருவல் முறைகளில் மேற்கொள்வது எப்படி என்பதற்குத் தான். இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் காப்பீட்டு நடைமுறையின்றி பெரும்பாலான நோயாளிகள் தாங்களாகவே பணம் செலுத்தும் வகையிலேயே உள்ளனர். இந்த சூழலில் அவர்களுக்கு சிறந்த, திறன்வாய்ந்த சிகிச்சை அளிப்பது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. உலகின் முன்னணி இதயநோய்சிகிச்சை நிபுணர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் இணையும் அரிய சந்திப்பாக இது திகழும். அவர்கள் ஒன்றாக அமர்ந்து, நவீனசிகிச்சை நடைமுறைகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து சரியான நோயாளிக்கு சரியான சிகிச்சை முறையை அளிப்பது குறித்து ஆலோசிகக்கவுள்ளனர். சர்வதேச வல்லுநர்களின் சிறந்த சிகிச்சை நடைமுறைகளை இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு அமல்படுத்தி சிறந்தகுணமளிப்பது குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் பேசப்படவுள்ளது.

2019 ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள் இந்திய இதய நோய் நிபுணர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுநர்களிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். சர்வதேச நிபுணர் குழுவில் டாக்டர் சுஷில் கோடாலி உள்ளார். 

இவர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதய அமைப்பியல் மற்றும் வால்வு மையத்தின் இயக்குநர் ஆவார். இவர் பெரிய அளவிலான டிரான்ஸ்கேதடர் வால்வு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். டாக்டர் கணேஷ் மனோகரன், (பெல்ஃபாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்- ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இதய நோய்மையங்கள் வால்வு சிகிச்சையைத் தொடங்கிய போது அவற்றுக்கு பயிற்சி அளித்தவர்), டாக்டர் பீட்டர் அன்டெரெகா மற்றும் டாக்டர் கெசாஃபொன்டோஸ் (ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் உள்ள கோட்டெஸ்கன் இதய நோய்மையத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் அதிக அளவு எண்ணிக்கையிலான டிரான்ஸ்கேதடர் ஆரோடிக்வால்வு மாற்று பயிற்சி திட்டங்களை வழங்கியவர்கள்), சிங்கப்பூரைச்சேர்ந்தடாக்டர்பால்சியாம், (ஆசியாவில் முதல் முதலில் டிரான்ஸ்கேதடர் ஆரோடிக்வால்வு மாற்று சிகிச்சையை மேற்கொண்டவர்), டாக்டர் மைக்கேல் காஸ்கே (ஃபோனிக்ஸ்-சில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர்), சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் கேவூன்ஹோ, கொரியா வின் டாக்டர் ஹியோசூகிம், ஃப்ளோரிடாவைச் சேர்ந்த டாக்டர் பிரிஜேஸ்வர் எஸ்மியானி மற்றும் தாய்லாந்தின் வச்சின் புத்தாரி உள்ளிட்ட முன்னணி நிபுணர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


இந்த உச்ச மாநாட்டில் பங்கேற்கும் தேசிய அளவிலான நிபுணர்குழுவில் டாக்டர் ஏ.பி. மேத்தா (மும்பை ஜலஸ்க் மருத்துவமனை இதயநோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் அஜித் முல்லசாரி, (மெட்ராஸ் மெடிக்கல்மிஷன் இதய நோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் மாத்யூ சாமுவேல் (சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சைப்பிரிவு இயக்குநர்) உள்ளிட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்ணணி நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்டியன் சம்மிட் (ஆழந்து உணர்ந்து அறிதல் உச்சி மாநாடு) பற்றி: (http://www.sentientsummit.com/)

இந்த சென்டியன்ட் சம்மிட் எனப்படும் ஆழந்து உணர்தல் உச்சிமாநாடு, தங்களது மையங்களில் சிறந்த, நவீன இதயநோய் சிகிச்சை திட்டங்களைத் தொடங்க நினைக்கும் மருத்து நிபுணர்களுக்கு பல்வேறு அம்சங்களை போதிக்கும் விதமாக மிகச் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே நவீன கட்டமைப்புடன் கூடிய இதயநோய்சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை அனுபவங்களைக் கேட்டறிந்து தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள இது களம் அமைத்துக் கொடுக்கிறது.

இந்த சென்டியன்ட் சம்மிட் எனப்படும் ஆழந்து உணர்ந்து அறிதல் உச்சிமாநாட்டை டாக்டர் சாய் சதீஷ் வடிவமைத்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இவர் ஒரு சர்வதேச டிரான்ஸ்கேதடர் ஆரோடிக்வால்வு சகிச்சை முறை பயிற்சியாளர் ஆவார். இவர் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பல இதயநோய் சிகிச்சை நிபுணர்களுக்கு ஆரோடிக்வால்வு உள்வைப்பு சிகிச்சை குறித்து பயிற்சி அளித்துள்ளார். மேலும் இந்தியாவில் மிக அதிக அளவிலான மித்ராக்ளிப் உள்வைப்பு சிகிச்சை முறைகளை மேற்கொண்டவர் என்ற பெருமையையும் பெற்றவர். டாக்டர் சாய் சதீஷ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் ஆக உள்ளார்.

டிரான்ஸ்கேதடர் சிகிச்சைகள் பற்றி: இந்தியாவை ஒரு இளம் நாடு எனவும் இங்கு பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் நம்மில் பலர் கருதுகிறோம். எனினும் மற்றொரு புறத்தில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து அவர்களின் எண்ணிக்கை 43 கோடியே 40 லட்சமமாக இருக்கும் (80 வயதுக்கு மேற்பட்டோர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை சற்று வித்தியாசமாக உணர வைக்கலாம். இதயம் சார்ந்த நோய்களால் மூன்றில் ஒரு மூத்தகுடி மக்கள் இறக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. 80 அல்லது 90 வயது உடையவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வயது மூப்பின் காரணமாக உரிய சிகிச்சை முறைகள் இருப்பது இல்லை. ஆரோட்டிக் ஸ்டெனோசிஸ் எனப்படும் ஆரோட்டிக் குறுக்கத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால், இதயம் ரத்தத்தை அனுமதிக்கும் போது ஆரோடிக்வால்வு அதை அனுமதிக்க திறந்து கொள்ளும். வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த வால்வு சுருங்கினால் ரத்தம் பாய்வதில் தடை ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆரோடிக் குறுக்கத்தால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8-ல் ஒருவரை இந்த நோய்தாக்கும். புற்றுநோயை விட அதிக இறப்புக்குக் காரணமாக இது அமைகிறது. மிகத் தீவிரமான ஆரோடிக்குறுக்கம் இருந்து அது சிகிச்சை அளிக்கப்படாமல் போனால் 90 சதவீதம் பேர் 4 ஆண்டுகளுக்குள் திடீரென உயிரிழக்கின்றனர். அறுவை சிகிச்சை என்பது மிக அரிதான சிகிச்சை முறை மட்டுமே

.பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவ மேலாண்மையையே கடை பிடிக்கின்றனர். இந்த நடைமுறை முதியவர்கள் நீண்ட காலம் வாழ வழி ஏற்படுத்துகிறது. எனினும் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்து விடுகிறது. படிப்படியாக அவர்களது வேகத்தைக் குறைத்து ஓய்வில் இருக்கும் படி செய்யும்.

டிரான்ஸ்கேதடர் ஆரோடிக் வால்வு மாற்று சிகிச்சை (டிஏவிஆர்) அல்லது டிரான்ஸ்கேதடர் ஆரோடிக்வால்வு உள்வைப்பு சிகிச்சை (டிஏவிஐ) சிகிச்சை என்பது குறைந்த துளையிடுதல், ஊடுருவல் கொண்ட சிகிச்சை ஆகும். துடிக்கும் இதயத்தின் மீது செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு கார்டியோபல் மோனரி பைபாஸ் (இதய – நுரையீரல் மாற்றுப்பாதை)சிகிச்சை தேவை இல்லை. 

அதற்கு பதிலாக, உலோக கம்பியால் செய்யப்பட்ட ரெவல்யூஷனரி வால்வுகள் எனப்படும் சுற்று வால்வுகள் மற்றும் விலங்கு திசு ஆகியவை மெல்லிய இழை (கேதடர்) மூலமாக, ஃபெமோரல் ஆர்டெரி (தொடைச்சிரைதமனி் )வழியாக நுழைக்கப்பட்டு அந்த இடத்தில் விரிவாக்கம் செய்யப்படும். இந்த நடைமுறையின் மூலம் நோயாளி 5 நாட்களில் வீட்டுக்குச்சென்று சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.

இந்த சிகிச்சை முறை அதிக சேதம் அடைந்த வால்வுகளைக் கொண்ட 90 வயது நிறைந்தவர்களுக்கு செய்ய முடியும். பைகுஸ் பிட் அல்லது 2 லீஃப்லெட் ஆரோடிக் வால்வுகள், மிட்ரல் வால்வுகளுக்கு அருகில் அறுவை சிகிச்சை மூலம் உள்வைக்கப்பட்ட உலோகத்துடன் கூடிய ஆரோடிக் வால்வுகள், அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டு தோல்வி அடைந்த ஆரோடிக் வால்வுகள், அதிக அளவு கசிவு உடைய ஆரோடிக் வால்வுகளைக் கொண்ட நோயாளிகள் ஆகியோருக்கும் இந்த சிகிச்சையை செய்ய முடியும்.

மற்றொரு நிலையாக மூத்த குடிமக்களில் மிட்ரல் வெளித்தள்ளுதல் என்பது இதயத்தின் மிட்ரல் வால்வு கூர் முனைகள் (லீஃப்லெட்ஸ் சரியாக கச்சிதமாக சேராத நிலை ஆகும். இதன் காரணமாக ரத்தம் இதயத்தின் இடதுபுற கீழ் அறையில் இருந்து (வென்ட்ரிகிள்) பின்னோக்கி பயணித்து இடது ஆட்ரியத்துக்கு செல்லும். இதையடுத்து உடலுக்கு ரத்தத்தை செலுத்த இதயம் மிக கடினமாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சோர்வு, மூச்சு இரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படக்கூடும். சில தீவிரமான நிலைகளில் இதய செயல் இழப்பு கூட ஏற்படக்கூடும்.

மிட்ராக்ளிப் (மற்றொரு டிரான்ஸ்கேதடர் சிகிச்சை) சிகிச்சை முறையில் கூர்முனைகள் (லீஃப்லெட்ஸ்) கிளிப் (கெட்டியாகபி டித்தல்) செய்யப்படுதல் மூலம் மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்படுகின்றன. இது அதிசயிக்கத்தக்க வகையில் நோயாளிகள் மத்தியில் நல்ல பலன்களைக் கொடுப்பதுடன் குறைந்த நாட்களே மருத்துவமனையில் தங்க வேண்டி வரும். அத்துடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்திலும் குறைவு ஏற்படாது. கடந்த ஆண்டு இந்தியாவில் இந்த சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது மிட்ரல் வால்வு கசிவுடன் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், அதிக இதயசெயல் இழப்பு ஏற்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அது வெற்றி அடைந்து அவர்கள் புது வாழ்வைப் பெற்று வருகின்றனர்.