தமிழக முதலமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்த பிரதமர்.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, மழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

இதனால் நகரின் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. 

இதனை அடுத்து பெரம்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். 

முதலமைச்சருடனான ஆய்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

தேங்கியுள்ள மழை நீரை விரைவாக அகற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்பகுதியில் உள்ள வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர், மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் வெளியூர்களில் இருந்து சென்னை வர திட்டமிட்டுள்ளவர்கள் பயணத்தை ஒத்திவைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். 

தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தாம் பிரார்த்தனை செய்வதாகவும் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ((GFX-1-OUT))

இதனிடையே தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெள்ள நிவாரணப் பணிகளுக்காக போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து தரவேண்டும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தேவையான நிதியை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.