லியோ டால்ஸ்டாய் அருங்காட்சியகம் ரஷ்யாவில் அவரின் பிறந்த கிராமமான யாசனய போலியானா என்கிற இடத்தில் இயங்கிக்கொண்டு வருகிறது !!!
லியோ டால்ஸ்டாய் அருங்காட்சியகம் ரஷ்யாவில் அவரின் பிறந்த கிராமமான யாசனய போலியானா என்கிற இடத்தில் இயங்கிக்கொண்டு வருகிறது !!! இந்தாண்டு அவர்களின் நூறாவது ஆண்டு நிறைவுவிழா ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கிறது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் வெங்கடேஷ்குமார் கலந்து கொள்ள உள்ளார். இவர் 2019இல் அங்கு நடந்த மொழிபெயர்ப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பாட்டனார் ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை (1896-1979) அவர்கள் 1932இல் எழுதிய "கதைமணிக்கோவை"- Stories from Tolstoy என்கின்ற புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தார் !! டால்ஸ்டாய் மொழிபெயர்ப்புகளில் தமிழில் வெளிவந்த முதல் புத்தகம் இதுவே ஆகும் !!! கோதண்டபாணி பிள்ளை அவர்கள் மாவட்ட ஆட்சியாளராகவும், அயல்நாட்டு செல்கை கட்டுப்பாளார் ஆகவும் 1930முதல் 1951வரை பணியாற்றியுள்ளார் !!! இவர் திரு வீ கா, தனிநாயகம் அடிகளார், சுப்பையா பிள்ளை,சோமசுந்தர பாரதியார் அவர்களின் நண்பர் ஆவார்!!! இந்த பயணம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்று நம்புகிறார் திரு வெங்கடேஷ்குமார்!!! கோதண்டபாணி பிள்ளை அவர்கள் இருவதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !!!
 
                        
 
                     
                     
                    


 
         
         
         
         
         
                         
                         
                         
                         
                         
         
         
         
         
        