தமிழகத்தின் ஊரடங்கு 24வது நாள் நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1343 . இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
"வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்.பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும்"-தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு
"பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம்".இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை. மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
ஊரடங்கை மீறியதாக 1,85,896 வாகனங்கள் பறிமுதல் - 2,05,054 வழக்குப் பதிவு.
தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் இன்று அதிகளவாக தஞ்சையில் 17, சென்னையில் 11, தென்காசி, திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா-தமிழக சுகாதாரத்துறை
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி!