மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் எனும் இந்தச் சாதனை.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டினை உயர்த்தி, தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை ஆக்கிட உழைக்கிறோம். தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்கிடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.