சூப்பர்ஹிட் சீரியல் திருமதி செல்வம் - மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில்..
சூப்பர்ஹிட் சீரியல் திருமதி செல்வம் - மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில்..
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தெய்வமகள்”, “நாயகி” நெடுந்தொடர்களை மாபெரும் வெற்றியடைய செய்த தமிழ் மக்களுக்கு நன்றி.
அதேநேரத்தில், தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்றுள்ள கலைஞர் தொலைக்காட்சி, மக்களின் மனம் கவர்ந்த சூப்பர்ஹிட் சின்னத்திரை தொடரான “திருமதி செல்வம்” நெடுந்தொடரை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது.
ச.குமரன் இயக்கத்தில் சஞ்சீவ் - அபிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திருமதி செல்வம் நெடுந்தொடர், வருகிற மார்ச் 29-ந் தேதி முதல் திங்கள் முதல் வியாழன், இரவு 9 :00மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த தொடரின் கதை, முன்னணி கதாபாத்திரமான செல்வத்தை (சஞ்ஜீவ்) மையப்படுத்தி நகர்கிறது. செல்வத்தின் நல்ல பண்புகள், கடின உழைப்பு மற்றும் தன் மனைவி அர்ச்சனா (அபிதா) மீதான காதல் அவரை, எவ்வாறு புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்கின்றது என்பதையும், பின்னர் பணம், புகழ் அவரை எவ்வாறு மாற்றியது என்பதையும் மையப்படுத்தி இதன் கதை நகர்கிறது. இதில், நடிகை வடிவுக்கரசி, நடிகர் சூரி, தீபக் தின்கர், பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடர், சிறந்த தொடருக்கான தமிழக அரசின் விருது, சிறந்த இயக்குனர், சிறந்த கதாபாத்திரம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.