கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது

கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, 

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் அதிக அளவு வெயிலின் தாக்கம் இருக்கும்.

தென் இந்தியாவில் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், தெலுங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்.

மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் இந்த ஆண்டு பருவ மழை வழக்கம் போல் இருக்கும்.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்து விட்டது. எனவே, கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.