"க்ரைம் நியூஸ்"
கொலை, கொள்ளை, பெண்கள் மீதான தாக்குதல்கள், லஞ்சம், அதிகாரத் துஷ்பிரயோகம் என அரசு அதிகாரிகளின் அத்து மீறல்களுடன், சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் அனைத்து குற்றங்களையும் செய்திகளாக கொடுக்கும் நிகழ்ச்சி தான் "க்ரைம் நியூஸ்"
குற்றசம்பவங்களை துல்லியமாக விவரிப்பதோடு, அதன் பின்னனி விவரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குரலையும் இந்நிகழ்ச்சி பதிவு செய்கிறது. மேலும் குற்றப்புலனாய்வு குறித்தும், அதன் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துக்களையும் கோர்த்து ஒரு தொகுப்பாகவே அளிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சௌந்தர்யா. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .