எஸ். ஆர். எம் பள்ளியின் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா மற்றும் இரத்ததான முகாம்
எஸ். ஆர். எம் பொதுப் பள்ளியில் இன்று [08.06.2019] காலை 9 மணியளவில் [2018-2019] கல்வியாண்டிற்கான ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் எஸ். ஆர். எம் பள்ளியின் தாளாளரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான திரு.எம்.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார். மேலும்,இவ்விழாவை சிறப்பிக்க கல்வி ஆலோசகர் டாக்டர்.கே.ஆர்.மாலதி அவர்களும், பள்ளியின் முதல்வர் எஸ்.புவனேஸ்வரி அவர்களும் உடன் இருந்தனர்.
இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் விருது பெற்றனர். பெற்றோர்களும் பங்கு பெற்றனர்.
மேலும், 10 மணியளவில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த LIONS CLUB சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு 40 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.