திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கிய ராமேசுவரம் கடல் - பாறைகள் தென்பட்டதால் பதறிய பக்தர்கள்...!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடல் சூழ்ந்த ராமேசுவரத்தில் ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இன்று (ஞாயிற்று) விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர்.

இந்த நிலையில், அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இயற்கை சீற்றம் ஏதோ ஏற்பட போகிறதோ? என்று பதட்டம் அடைந்தனர். ஆனால் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காணப்பட்டது.

இதனால் ஒரு சில பக்தர்கள் அச்சம் அடைந்த போதிலும் பல பக்தர்கள் அதை பற்றி கவலைபடாமல் புனித நீராடினர். கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், சாமி சிலைகள் வெளியே தெரிந்தன.

ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக திடீர், திடீரென கடல் உள்வாங்கியபடி இருப்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்று ராமேசுவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.