கட்சி பதிவு செய்ய ரஜினி, அழகிரி மும்முரம்!

கட்சி பதிவு செய்ய ரஜினி, அழகிரி மும்முரம்!
கட்சி பதிவு செய்ய ரஜினி, அழகிரி மும்முரம்!

கட்சி பதிவு செய்ய ரஜினி, அழகிரி மும்முரம்!

கட்சியை துவக்குவது என முடிவு செய்துவிட்ட ரஜினிகாந்த், அடுத்த கட்டமாக, தன் கட்சி பெயர், கட்சியின் சட்ட திட்டங்கள் ஆகியவற்றை, டில்லியில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தயாராகி வருகிறார்; இதற்கான நடவடிக்கைகள் அதிரடியாக நடந்து வருகின்றன.

டில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 'கட்சியை பதிவு செய்ய என்னென்ன தேவைப்படும்' என, ஒரு பட்டியல் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் ஆணையத்தில், ரஜினியின் கட்சி பதிவு செய்யப்பட உள்ளது.சின்னம் தேர்ந்தெடுப்பது இப்போதைக்கு முடியாது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவித்த பின் தான், புதிதாக பதிவு செய்துள்ள கட்சிகள் சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். சில பொதுவான தேர்தல் சின்னங்கள் உள்ளன. அதிலிருந்து ஒன்றை ரஜினி தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த சின்னத்தை, மற்ற பதிவு செய்துள்ள கட்சிகள் கேட்டால் பிரச்னை வரும். எனவே, இப்போதே என்ன சின்னம் வேண்டும் என்பதை முடிவு செய்ய,ரஜினி தயாராக இருக்க வேண்டும். இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும், தன் கட்சியை பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

சில உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், அழகிரியின் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கலைஞர் திமு.க., என தன் கட்சிக்கு, அழகிரி பெயர் வைக்கப்போவதாக டில்லியில் சொல்லப்படுகிறது.