“ சாமானியரின் குரல் ”

“ சாமானியரின் குரல் ”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 02:30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 04:30 மணிக்கும்  சாமானியரின் குரல் ” எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை 8-ஆவது ஆண்டாக வெற்றிகரமாக பயணிக்கிறது சாமானிரயரின் குரல். கடந்து செல்லும் மக்களே எங்களையும் கொஞ்சம் கண்டுகொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் சாமானியர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் கேட்கப்படாத இவர்களின் குரல், உலகத்துக்கே கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி.

வாரம் இருமுறை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, எழுதி, இயக்கி  தன் குரலையே சாமானியரின் குரலாக பதிவு செய்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மணிமாறன்.