மீண்டும் புதிய தலைமுறையில் இடிதாங்கி

மீண்டும் புதிய தலைமுறையில் இடிதாங்கி

ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற அதிரடி முழக்கத்துடன் அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் சொல்லி பார்வையாளர்களை கவர்ந்தவர் இடிதாங்கி. புதியதலைமுறையின் கிச்சன் கேபினட் என்ற அரசியல் அங்கத நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இடிதாங்கி வந்து கொண்டிருந்தார். சிறிய இடைவேளைக்குப்பின்னர் மீண்டும் இந்த பகுதி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.. நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை, தனித்த மொழி நடையுடன் சுவையுடன் சொல்வது இடிதாங்கியின் சிறப்பு. அன்றாடச் செய்திகளை பாட்டு, திரைப்படம், சாமானியர் பார்வை என்று சுவையுள்ள பல பகுதிகளைக் கொண்ட கிச்சன் கேபினட் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 10:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.