“முரளி நாதலஹரி”
“முரளி நாதலஹரி”
டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா டிரஸ்ட் வழங்கும் “முரளி நாதலஹரி” விருது சிறப்பு நிகழ்ச்சி...
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக ‘முரளி நாத லஹரி’ என்னும் விருது கடந்த 2017 - லில் இருந்து கடந்த சில வருடங்களாக கர்நாடக இசை உலகிலும், திரை துறையிலும் சாதனை புரிந்த இசைக்கலைஞர்களுக்கு முரளி நாதலஹரி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல மிருதங்க வித்வான் கலைமாமணி திரு. குருவாயூர் துரை அவர்களுக்கு முரளி நாதலஹரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய அமைச்சரும் நடிகருமான திரு. சுரேஷ் கோபி வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு. மிருதங்க வித்வான், மிருதங்க மூத்த இசைக் கலைஞர் டிவி. கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ.முஷ்ணம் ராஜாராவ், பாரதி வித்யா பவன் திரு. ராமசாமி, திரு. வெங்கடாசலம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குருவாயூர் துரை அவர்களை கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று நமது புதுயுகத்தில் சிறப்பு தொகுப்பாக வரும் ஆகஸ்ட் 15 காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.