மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்


சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுபாடு உள்ள நிலையில், மெரினா கடற்கரையோரம் உள்ள மணல் பரப்பில் தோண்டினால் சில அடி ஆழத்தில் உப்பு இல்லாத தண்ணீர் கிடைக்கும். இதையடுத்து கடற்கரை மணல் பரப்பில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 6 போர்வெல் அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு உள்ளது.

இதில் நொச்சிக்குப்பம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட கடற்கரையோரம் உள்ள பொதுமக்கள், பம்ப்பில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார்கள். வரிசையில் நின்று குடங்களில் பிடித்து ஆட்டோக்களில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.

உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, அடி பம்ப்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் நல்ல தெளிவாகவும், முற்றிலும் உப்பில்லாமலும் இருக்கிறது. அந்த தண்ணீரை துணியை வைத்து வடிகட்டி குடிக்க பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல் அடி பம்ப்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.