பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன்”

பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன்”

பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை 11:00மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. 

மனம் சொல்வதை உடல் கேட்க வேண்டும். மனமும் உடலும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கும் போது வாழ்வு இனிப்பாகும். நாட்கள் மகிழ்வாகும்.நம் வாழ்க்கை நம் கையில். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவருக்கும் ஒரே பிரச்னை மனம்.

இல்லற வாழ்வில் விட்டுக்கொடுக்காமை, காதல் உறவில் விரிசல், ஆழமான உணர்வுகளை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்பதில் குழப்பம்.

ஒரு முறை அடுத்தவரிடம் மன அழுத்தத்தை இறக்கி வைத்துவிட்டால் பாரம் குறைந்துவிடும் மனம் இளவாகிவிடும். துக்கம் கூட சுகமாகும்.

யாரிடம் சொல்வது அதற்கான பதில் பெப்பர்ஸ் டிவியின் காதோடுதான் நான் பேசுவேன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உற்ற நண்பராய் உளவியல் ஆலோசகராய் காதோடு பேச வருகிறார் மன நல ஆலோசகர் ராஜ ராஜேஸ்வரி .