பெப்பர்ஸ் டி.வி.யின் “கானா பேட்டை”
பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் பெப்பர்ஸ் டி.வி.யின் புத்தம் புதிய நிகழ்ச்சி கானா பேட்டை. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு பெப்பர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகிறது.
சென்னைக்கு பல பெருமைகள் உண்டு அதில் தனி முத்திரை பதித்தது கானா வட சென்னை தான் கானாவின் பூர்வீகம் என்று சொல்லலாம்.
ஒரு கானா பாடல் எப்படி உருவாகிறது, கானா பாடகர்கள் எப்படி உருவாகிறார்கள் கானா பாட்டிற்கு என்று தனி வாத்தியார்கள் இருக்கிறார்கள். கானா என்ற பெயர் எப்படி வந்தது. இப்படி கானாவின் வரலாறும், கானா பற்றிய பல அறிய தகவல்களை சொல்லும் நிகழ்ச்சி தான் கானா பேட்டை பொழுது போக்கிற்காக பாட தொடங்கிய கானா சென்னை வாசிகளின் சுப, துக்க நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக எப்படி மாறியது. பிறகு ஆடியோ கேசட்டில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கானா படிப் படியாக முன்னேறி சின்னத்திரை, பெரியத்திரையிலும் பல கானா பாடகர்கள் பிரபலமாகி வருகிறார்கள்
இப்படி திறமையான கானா பாடகர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களின் கானா வாழ்கையின் அனுபவங்களையும் கலக்கலான கானா பாடல்களையும் பாடவைத்து ஆடவைத்து தளம் போடவைக்கும் நிகழ்ச்சி கானா பேட்டை. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகும். காணத்தவறாதீர்கள்.