நியூஸ் 7 தமிழின் மற்றுமொரு புதிய வெளியீடு. நியூஸ் 7 தமிழ் பக்தி யூ-டியூப் சேனல்
நியூஸ் 7 தமிழின் மற்றுமொரு புதிய வெளியீடு. நியூஸ் 7 தமிழ் பக்தி யூ-டியூப் சேனல், டிஜிட்டல் உலகில் இன்னுமொரு ஆன்மீக புரட்சி. நியூஸ் 7 தமிழ் பிரைம்- ன் வெற்றியை தொடர்ந்து, ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய தேடல், ஒரு புதிய நம்பிக்கை என்ற மந்திர வார்த்தைகளை கொண்டு செயல்படும் News 7 Tamil Bhakthi You Tube சேனல் இது.
பொறுப்பும் பொது நலனும் என்ற தாரக மந்திரத்தை இலக்காக கொண்டு செயல்படும், நியூஸ் 7 தமிழ், 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியானது 2014 ஆம் ஆண்டு அலையன்ஸ் பிராட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் பல புதுமைகளையும், பல பரிமாணங்களையும் தொட்டது நியூஸ் 7 தமிழ். வழக்கமான செய்திகள் மட்டுமின்றி, கள ஆய்வுகள், புலனாய்வு செய்திகளில் இன்னும் ஆழமாக செயல்பட்டு பல உண்மைகளை, வெளிக்கொணர்ந்து செய்தியாக வெளியிட்டது நியூஸ் 7 தமிழ்.
கொரோனோ என்னும் பெருந் தொற்று உலகையே ஒட்டு மொத்தமாக செயல்படாமல் பூட்டி வைத்து விட்டது. அவ்வவ்போது, இடைவேளைகள் போல உலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கல்வி, கலை, பண்பாடு, வீரம், ஆன்மிகம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, ஆன்மீகத்திலும் உச்சம் தொட்ட பூமியாகும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முது மொழிக்கேற்ப நாள்தோறும் ஆலயங்கள் சென்றவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கொரோனா பேரிடரால் அனைத்து மதங்களின் ஆன்மிக வழிபாட்டு தலங்களும் ஒன்றரை ஆண்டுகளாக, சில மாதங்கள் தவிர்த்து பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. எப்போதும் அனைத்திலும் உங்களுக்கு தேவையானதை தரும் நியூஸ் 7 தமிழ், இந்த பேரிடர் காலத்தில் நிம்மதி இல்லாமல் இல்லத்தில் தவிக்கும் உங்களுக்கு, ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள் பற்றிய ஆன்மிக தகவல்கள், இல்லத்திலிருந்தே இறைவனை வழிபடும் முறைகளைப்பற்றியும் ஆன்மிக செய்திகளாக உங்களுக்கு தர இருக்கிறது.
தொன்மை வாய்ந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் இன்னும் மறையாமல் பின்பற்றப்படும் சமண, சமய வழிபாடுகள் இவை அனைத்தையும் தாண்டி, குலத்தை காத்து வாழ்வளிக்கும் குல தெய்வ வழிபாடுகள் என ஆன்மிகத்தின் அனைத்து வாசல்களையும் உங்களுக்காக நாங்கள் வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம், நறுமண மலர்களின் தொகுப்புகளை உள்ளடக்கிய அழகிய பூமாலை போல் இந்த பக்தி சேனல் இருக்கும், நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் ஆன்மிக தகவல்கள், வழிபாடுகள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், வானியல், மருத்துவ ஆன்மிகம் என எண்ணற்ற ஆன்மிக தகவல்கள் உங்களுக்காக. டிஜிட்டல் செய்தி உலகில் வெற்றி கண்ட நியூஸ் 7 தமிழ் பிரைமின் மற்றுமொரு புதிய பதிப்பான News 7 Tamil Bhakthi You Tube சேனலை கண்டு களியுங்கள், பேராதரவை தாருங்கள்.