நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கிரைம் டைரி

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கிரைம் டைரி

வழக்கமாக குற்றச் செய்திகளின் அணிவகுப்பாக இல்லாத ஒரு நிகழ்ச்சி... ஒரு குற்றம் எதனால் நடக்கிறது... அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்று மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைக்கப்படுவது கிரைம் டைரியின் சிறப்பு... இந்த நிகழ்ச்சி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு10:30 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு மறுநாள் மதியம் 1:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாக வருவது துப்பு துலக்குவது எப்படி இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் ஒரு மிகச் சிறந்த பாடமாகும் ஒரு வழக்கு எவ்வாறு துப்பு துலக்கப்பட்டது என்பதை அக்குவேறு ஆணிவேராக இந்த நிகழ்ச்சி சொல்கிறது இதுமட்டுமின்றி அன்றைய நாளில் நடைபெறும் குற்ற செய்திகள் பலவிதமான வடிவங்களில் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது குற்றங்களை பதிவு செய்வதோடு மட்டுமின்றி அதன் பின்னணியை அதன் காரணிகளை உருவாகும் விதத்தினை அப்படியான குற்றங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் விதத்தினை தொகுத்து வழங்கும் விதத்தில் கிரைம் டைரி  சமகாலத்தின் மிகச் சிறந்த ஆவணம்.