தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை உறுதி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை உறுதி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்

திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 
வதந்திகள் பரவின.

இந்நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், "மாணவர்களின் நலனுக்கு ஏற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. மேலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. எனவே, விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில் பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்."