"மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி"

"மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி"

சென்னை: சென்னையில் பக்கவாத நோயால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் குருதியோட்டக் குறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 20 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட 22 பேரை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் காப்பாற்றியுள்ளார்.

உலகில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் பக்கவாதம் மற்றும் குருதியோட்டக் குறைபக்கவாதம் மிகப்பெரிய பங்குவகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

வளரும் நாடுகளில் பக்கவாதம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெருநகரங்களில் இந்த நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்து வருகிறது. ஒரே மாதத்தில் 12-க்கும் மேற்ப்பட்ட பக்கவாத நோயாளிகள் சென்னை பழையமகாபலிபுரம் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்களாவர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அப்பல்லோ மருத்துவமனையில், மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் எஸ், கார்த்திகேயன் மேற்பார்வையில் கடந்த சில மாதங்களில் மட்டும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 22 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50சதவீதம் பேர் 20 முதல் 40வயதுக்கு உட்பட்டவர்கள்.

பெரும்பாலான பக்கவாதங்கள் (85 சதவீதம்) மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்படுவதால் ஏற்படுகின்றன. கட்டிகள் மற்றும் ரத்த உறைவு காரணமாக இது ஏற்படக்கூடும். 

வழக்கமாக இது குருதியோட்டக் குறைபக்கவாதம் (இஸ்கெமிக் ஸ்ட்ரோக்) என்று அழைக்கப்படுகிறது. ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுவதால் சுற்றியுள்ள மூளை செல்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். 

ரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு ஏற்பட்டு சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி என்ற சிகிச்சை நடைமுறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி என்பது கடுமையான குருதியோட்டக் குறைபக்கவாத நோயை குணப்படுத்தும் புதிய புரட்சிகரமான சிகிச்சை முறை ஆகும். 

மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி என்பது ஒரு என்டோவாஸ்குலர் நடைமுறை ஆகும். அதாவது குறைந்த துளையிடல் முறையிலான அறுவைசிகிச்சை நடைமுறை. இந்த நடைமுறையில், ஸ்டெண்ட் உடன் கூடிய சிறியவடி குழாய் நோயாளியின் கால் முதல் மூளை வரை செலுத்தப்பட்டு கட்டிகள் கண்டறியப்பட்டு ஸ்டெண்ட் மூலம் அது அகற்றப்படும்.

இந்த சிகிச்சை நடைமுறை குறித்துக்கருத்துத் தெரிவித்த சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். கார்த்திகேயன், “மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் போன்றவையே இதயமற்றும் மூளைநோய்களுக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இளைஞர்கள் பலர் ஒருநாளைக்கு 12 முதல் 14 மணிநேரம் வேலைபளுவால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். பலர் காலதாமதமாக தூங்குவது, மாறுபட்ட ஷிப்ட் முறையில் பணிபுரிவது போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவையே இளைஞர்களை பக்கவாதம் தாக்க அதிக காரணங்களாக அமைந்துள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்களது மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இளைஞர்களைப் பக்கவாதம் தாக்கும் போது மூளை வேகமாக வீங்கக்கூடும். எனவே பக்கவாத நோயால் பாதிக்கப்படுவோரை 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது அவசியம். பெரும்பாலான நோயாளிகளுக்கு மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி சிகிச்சை முறையையே நாங்கள் பின்பற்றுகிறோம்.

சில நோயாளிகளுக்கு ரத்த உறைவை சிதைக்க இண்ட்ராவெனஸ் த்ரோம்போலிசில் சிகிச்சை நடைமுறையையும் பின்பற்றுகிறோம். மருத்துவ சிகிச்சைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பக்கவாத நோய்க்கு உரியநேரத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டால் அது முடக்கும் நோயாகமாறாது.” என்றார்.

சிறந்த விழிப்புணர்வு நடைமுறைகள் மற்றும் நோய்கண்டறியும் நடைமுறைகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பக்கவாத நோய்பாதிப்பைத் தடுக்கமுடியும் ஆதெரோ செலரிசிஸ் எனப்படும் தமனித்தடிப்பால் தான் இளைஞர்களுக்கு இது அதிகம் ஏற்படுகிறது. ஆரோக்கியம் அற்ற வாழ்க்கை முறை, உடல்பருமன், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் இந்த தமனித்தடிப்பு ஏற்படக்கூடும். ரத்தக்குழாய்களில் வீக்கம் (வாஸ்குலிட்டிஸ்), இதய குறைபாடுகள், குழாய்களில் துண்டிப்பு (டிஸ்செக்ஷன்), உறைதல் குறைபாடுகள் (கொயே குலேஷன்டிஸ் ஆர்டர்ஸ்) போன்றவற்றாலும் அதிக அளவில் பக்கவாதம் ஏற்படக்கூடும்.