இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்

இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்
இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்

இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்

‛‛ மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ், இந்தியா நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என ‛ஐஸ்' வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது.

மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றது முதல், அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததுடன் இந்தியா எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தார். அந்நாட்டில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்தார்.
அந்நாட்டு அமைச்சர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்க உறவு மேலும் விரிசலை கண்டது. மூயிஸ் கூறியபடி, இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் தாயகம் திரும்பினர். எஞ்சியுள்ள வீரர்களும் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில்,அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு மாலத்தீவு அதிபர் மூயிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாலத்தீவுக்கு மிகப்பெரிய உதவி வழங்குவதில் இந்தியா பெரிய பங்கு வகித்தது. பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை செயல்படுத்தியது. எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள் ளநிலையில் அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது.
எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனை த் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும். இதை இந்திய அரசுச் செய்யும் என நம்புகிறேன். மாலத்தீவின் பொருளதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.