தமிழ்மேட்ரிமோனி “செக்யூர்கனெக்ட்” அம்சத்தை முன்னிலைப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரத்தில் எம்.எஸ். தோனி.

தமிழ்மேட்ரிமோனி “செக்யூர்கனெக்ட்” அம்சத்தை முன்னிலைப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரத்தில் எம்.எஸ். தோனி.
தமிழ்மேட்ரிமோனி “செக்யூர்கனெக்ட்” அம்சத்தை முன்னிலைப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரத்தில் எம்.எஸ். தோனி.

தமிழ்மேட்ரிமோனி “செக்யூர்கனெக்ட்” அம்சத்தை முன்னிலைப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரத்தில் எம்.எஸ். தோனி.
தங்களது தொலைபேசி எண்ணை வெளிப்படுத்தாமல் பொருத்தமான நபர்களிடமிருந்து அழைப்புகளை பெண்கள் பெற இந்த புதிய அம்சம் உதவும் 

சென்னை, 10 ஜுன், 2021: உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் நம்பிக்கைக்குரிய நம்பர் 1 மேட்ரிமோனி சேவையான (திருமண ஏற்பாடு சேவை) “தமிழ் மேட்ரிமோனி”, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இடம்பெறுகின்ற “செக்யூர்கனெக்ட்” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

பெண்கள், தங்களது வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுப்பதை மிகவும் பாதுகாப்பாகவும், பகிரும் தகவல்கள் மீது முழு கட்டுப்பாடும் கொள்ளத்தக்க வகையில் “தமிழ் மேட்ரிமோனி” தளத்தின் சேவைகள் அமைந்திருப்பதை விளக்குகிறது இந்த விளம்பரம்.  

ஒரு மேட்ரிமோனி இணைய செயல்தளத்தில், தங்களது தொடர்பு எண்களை பிற நபர்கள் அணுகிப்பெற  இயலும் என்ற கவலை கொண்டிருக்கும் “தமிழ் மேட்ரிமோனி” பெண் பயனர்களுக்கு, தமிழ் மேட்ரிமோனியின் செக்யூர்கனெக்ட் (SecureConnect®) மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.  

ப்ரீமியம் உறுப்பினரான ஆண் பயனர்களிடமிருந்து “தமிழ் மேட்ரிமோனி” வழியாக  அழைப்புகளை பெறும்போது பெண் பயனர்கள் தங்களுடைய தொடர்பு எண்ணை வெளிப்படுத்தாமலேயே செக்யூர்கனெக்ட் (SecureConnect®) மூலம் உரையாடலாம். பெண்களுக்காக இதுபோன்ற தனித்துவமான பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் ஒரே மேட்ரிமோனி செயல்தளம் தமிழ் மேட்ரிமோனி மட்டுமே.

பெண் உறுப்பினர்கள், செக்யூர்கனெக்ட்®சேவையை,செட்டிங்ஸ் பகுதியில் உள்ள “எனது எண்ணைக்  காட்டாமல் அழைப்புகளைப் பெறு” (“Receive calls without showing my number”) என்று தேர்வு செய்வதன் மூலம் பெறலாம். இனி கவலையின்றி செக்யூர்கனெக்ட்®சேவை மூலம் பொருத்தமான ஆண் உறுப்பினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெறலாம். 

“பாதுகாப்பு மற்றும் தகவல் கட்டுப்பாடு” ஆகியவை ஒரு வாழ்க்கைத் துணைவரை தேடுகிறபோது பெண்களின் முக்கியமான தேவைகளாக இருப்பதைதமிழ்மேட்ரிமோனியில் நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களது  பெண் உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பான சேவையை  வழங்குவதற்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்.  அவர்களது தகவல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மீது மேம்பட்ட அதிகாரத்தை பெண்களுக்கு வழங்குவதில் செக்யூர்கனெக்ட்® என்ற இந்த அம்சம்,ஒரு பெரிய முன்னேற்ற நடவடிக்கையாகும்.

இப்போது, பெண்கள் அவர்களது சுயவிவரக்குறிப்பின் மீது அவர்களது தொலைபேசி எண்ணை தைரியமாகக் குறிப்பிடலாம்.  “தமிழ் மேட்ரிமோனி சேவையைப் பயன்படுத்துகிறபோது அவர்களது அனுபவத்தை இந்த புதிய செக்யூர்கனெக்ட் (SecureConnect®) பாதுகாப்பு அம்சம் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்கிறார் மேட்ரிமோனி.காம் - ன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான திரு. முருகவேல் ஜானகிராமன்.

பாரத் மேட்ரிமோனியின் பிராண்டு தூதரான பிரபல கிரிக்கெட் வீரர் திரு. எம்எஸ். தோனி பேசுகையில்,“தமிழ் மேட்ரிமோனியின் புதிய பாதுகாப்பு அம்சமான “செக்யூர்கனெக்ட்®” பெண்கள், தங்களது வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுப்பதை மிகவும் பாதுகாப்பாகவும், பகிரும் தகவல்கள் மீது முழு கட்டுப்பாடும் கொள்ளத்தக்க வகையில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  வாழ்க்கைத் துணைவரை கண்டறிய முற்படுகிறபோது, பெண்களின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்திசெய்வது மீது “தமிழ் மேட்ரிமோனி” உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது,” என்று கூறினார். 
தொலைக்காட்சி விளம்பரத்திற்கான இணைப்பு: