இன்று சென்னையில் கமல்ஹாசன் 2வது கட்ட பிரச்சாரம் தொடங்கினார்

இன்று சென்னையில் கமல்ஹாசன் 2வது கட்ட பிரச்சாரம் தொடங்கினார்
இன்று சென்னையில் கமல்ஹாசன் 2வது கட்ட பிரச்சாரம் தொடங்கினார்

இன்று சென்னையில் கமல்ஹாசன் 2வது கட்ட பிரச்சாரம் தொடங்கினார்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை சென்னை போரூரில் இருந்து தொடங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை தென் தமிழ்நாட்டில் கமல்ஹாசன் ஏற்கனவே மேற்கொண்டிருந்தார். திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த பிரசாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டார்.
இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, எம்ஜிஆரின் நீட்சி தாம் என்று கமல்ஹாசன் பிரசாரம் செய்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு கமல்ஹாசனும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று முதல் 22-ந் தேதி வரை 2-ம் கட்ட பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்கி உள்ளார்.
சென்னை போரூர் பகுதியில் இன்று மாலை கமல்ஹாசன் திறந்த ஜீப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கமல்ஹாசன் இந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார்.