ஜெயா டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று பிரபல பேச்சாளர் திரு.பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 
வாழ்வை வளமாக்குவது ஆன்மீகமா, அறிவியலா என்ற தலைப்பில் நடக்கும் இப்பட்டிமன்றத்தில் ஆன்மீகமே என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், திருமதி.கார்த்திகா ராஜா, திரு.தாமல் சரவணன் ஆகியோரும், அறிவியலே என்ற அணியில் செல்வி.ஆர்ஜே.நர்மதா, செல்வி.காவ்யா, திரு.உமாசங்கர் ஆகியோரும் பங்கேற்று தங்கள் அணியின் வாதங்களை ஆணித்தரமாகவும், அர்த்தமுள்ளதாகவும் முன்வைத்துள்ளனர். 
பெரும்பாலான பட்டிமன்றங்கள் வெறும் கேளிக்கைக்காக நடத்தப்படும் இன்றைய சூழலில் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் சிந்தனைக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்று நிகழ்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தமிழ் புத்தாண்டன்று காலை 9:00 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.
காமெடி கடியரங்கம்
ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘காமெடி கடியரங்கம்’. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரும், டிவி தொகுப்பாளருமான ஆதவன் நடுவராக இருந்து தொகுத்து வழங்குகிறார். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் 90ஸ் கிட்ஸா, 2K கிட்ஸா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த புதுமையான நகைச்சுவை நிகழ்ச்சியில் சவுண்ட் சந்தியா, நர்மதா, ரிஷா, பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கலக்கலாகவும், கலகலப்பாகவும் பேசி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கவுள்ளனர்.