ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும்

ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும்

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக  மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி புயலாகும். ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும். ஏப்.30-ம் தேதி வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும்" என தெரிவித்துள்ளார்.