கலைஞர் டிவியில் கலாட்டா கிரௌன் 2022 விருதுகள்
கலைஞர் டிவியில் கலாட்டா கிரௌன் 2022 விருதுகள்
கலைஞர் தொலைக்காட்சியில் கருணாகரனின் "லிட்டில் சூப்பர் ஹீரோஸ்" ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், ப்ரீத்தி, ராதிகா சரத்குமார் நடிக்கும் "பொன்னி C/O ராணி", மாளவிகா, ஸ்வேதா நடிக்கும் "கண்ணெதிரே தோன்றினாள்" உள்ளிட்ட புத்தம் புதிய நெடுந்தொடர்கள் ஜூன் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்ததாக "கலாட்டா கிரெளன் 2022 விருதுகள்" வழங்கும் விழா ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே.சூர்யா, அனிருத், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், ஆர்யா, சாயிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், தன்யா ரவிச்சந்திரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
கலாட்டா விருது வழங்கும் விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பு முன்னோட்டம் கலைஞர் தொலைக்காட்சியில், வருகிற ஜூன் 19 ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கிறது. விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 26, ஜூலை 3 ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.