சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்னை: இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.