தமிழ் வழியில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரிசோர்சியோ (Resorcio) ஆதரவு அளிக்கிறது

தமிழ் வழியில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரிசோர்சியோ (Resorcio) ஆதரவு அளிக்கிறது
தமிழ் வழியில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரிசோர்சியோ (Resorcio) ஆதரவு அளிக்கிறது
தமிழ் வழியில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரிசோர்சியோ (Resorcio) ஆதரவு அளிக்கிறது

 

தமிழ் வழியில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரிசோர்சியோ (Resorcio) ஆதரவு அளிக்கிறது
சென்னை: ஜூன் 28, 2022: Resorcioபன்மொழி உள்ளடக்க -தொகுப்பு தொடக்க நிலை நிறுவனங்களில் ஒன்றான ரிசோர்சியோ, 8, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து பள்ளிகளுக்கு திரும்பி வரும் சூழ்நிலையில் வழக்கமான பள்ளி நாட்களில் ஏற்படும் இடையூறுகளை சமாளிப்பதற்கு அவர்களுக்கு உதவும் வகையில், தங்களின் ஆதரவை அறிவித்தது. பள்ளி பாடத்திட்டத்திற்கு தேவைப்படும் கல்விப் பொருட்கள் தளத்தில் மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்கும். எட்-டெக் ஸ்டார்ட்-அப், நிறுவனமான ரிசோர்சியோ என்பது ஆடியோ, பிபிடிஎஸ் மற்றும் பிடிஎஃப் போன்ற வடிவங்களில் பல்வேறு பாடங்களை உருவாக்கவும், வாங்கவும் மற்றும் விற்கவும், இ காமர்ஸ் ஆன்லைன் வணிகதளமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான வணிக மாடலாகும். எட்-டெக் ஸ்டார்ட்அப் சமீபத்தில் இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணனை முதலீட்டாளராக இணைத்தது.
ரிசோர்சியோ நவம்பர் 2021 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, உலகம் முழுவதிலுமிருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 90,000 ஆயிரம் பதிவுகளை தாண்டியுள்ளது. இதில் 11% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தளத்தில் 35,000 க்கும் மேற்பட்ட தனித்துவமான உள்ளடக்கம் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வடிவங்களில் 300 க்கும் மேற்பட்ட பாடங்களுடன் குறிப்பாக தமிழில் நடப்பு விவகாரங்கள், வரலாறு, கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் அறிவியல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. அதிக அளவிலான ஆங்கில உள்ளடக்கம் இந்த டிஜிட்டல் பகுதியில் உள்ளது. மேலும் ரிசோர்சியோ ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் அரபு போன்ற பிராந்திய உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துகிறது.
உள்ளடக்க சந்தையின் எழுச்சியை கருத்தில் கொண்டு, அதன் பயனாளிகளுக்கு நம்பகமான உள்ளடக்கத்தை வழங்கும் நோக்கத்துடன் ரிசோர்சியோ நிறுவப்பட்டது. இந்த தளத்தில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு கட்டுரையும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, கருத்துத் திருட்டு மற்றும் உண்மைகள் தொடர்பான மதிப்பீடு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த தளத்தில் கிடைக்கும் கல்விப் பொருட்கள் மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்கு தயாராகி, அந்தந்த தலைப்புகளில் அவர்களுக்கு நுண்ணறிவுகளை வழங்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,’ என்கிறார் சிஇஓ மற்றும் நிறுவனர் கீதிகா சுதீப்.
அவர் மேலும் கூறுகையில், ‘கல்வியாளர்களிடையே உள்ள டிஜிட்டல் திறன் பிளவுகளின் பெரிய சிக்கலை தீர்க்கும் முயற்சியில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தால் (குசாட்) சான்றளிக்கப்பட்ட இலவச மேம்பாடு திட்டமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதன் மூலம், கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியர்களுக்கு அதிக அளவில் அறிமுகம் செய்து அதன் மூலம் கற்பித்தலை மேலும் ஈடுபாட்டுடன் ஆக்குவதற்கு நாங்கள் பணியாற்றுகிறோம்.
எதிர்கால திட்டங்களில் வீடியோ உள்ளடக்கம் (இப்போது தளத்தில் கிடைக்கும் படிக்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய உள்ளடக்கத்துடன் கூடுதலாக) மற்றும் இந்தி, பெங்காலி உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். ரிசோர்சியோ, அதன் பங்குதாரர்களுக்கு சேவை வழங்கல்களை விரிவுபடுத்த, தொடர் ஏ நிதி நிலையில் உள்ளது.
About Resorcio
Resorcio by Seamless [Seamless Innovation Technologies Private Limited ] is a unique business model conceptualized as an e-commerce platform to create, promote and share knowledge. The platform promotes engagement at individual and community level and thereby makes a significant change in the conventional knowledge-sharing business model. The platform offers crisp, concise and validated online resources in various formats and languages that can be easily downloaded. Employing gamification techniques, the platform delivers a unique interface to its users. Resorcio is attractive to authors/contributors, as the same are encouraged to engage as 'content creators' to monetize their contributions.