சுற்றுச்சூழலைக் காக்க வலியுறுத்தும் “ஈகோ இந்தியா” நிகழ்ச்சி
சுற்றுச்சூழலைக் காக்க வலியுறுத்தும் “ஈகோ இந்தியா” நிகழ்ச்சி
நீரை எப்படி சேமிப்பது.? நெகிழிக்கு மாற்று என்ன? கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது எப்படி? இயற்கையாக கிடைக்கும் ஆற்றலுக்கான வழிமுறைகள் என்னென்னெ ?. இப்படி சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இந்த பூமிப்பந்தை பசுமையாக்கும் வழிகளை காட்சி மூலமாக பார்வையாளர்களுக்கு அளிக்கும் நிகழ்ச்சிதான் ஈகோ இந்தியா என்ற சுற்றுச் சூழல் நிகழ்ச்சி.
பருவநிலை மாற்றம் காரணமாக ஒரு புறம் பெருவெள்ளம் மற்றொரு புறம் வறட்சி என்று வானிலையில் பல மாற்றங்களை காண்கிறோம். கார்பன் உமிழ்வு கார ணமாக புவி நாளுக்கு நாள் சூடாகி வருகிறது. புவிவெம்மையைக் குறைக்க பன்னாட்டளவில் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சி வழங்கிக்கொண்டிருக்கிறது. டாச்சே வெல்ல என்ற ( DW) ஜெர்மானிய தொலைக்காட்சியோடு இணைந்து புதிய தலைமுறை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சூழல் சார்ந்த பிரச்சினைகள் மையப்படுத்தப்படுகின்றன. தமிழகம், இந்தியா மற்றும் பன்னாட்டு அளவில் சூழல் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் பல கதைகளை படமாக்கி பார்வையாளர்களுக்கு தருவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
வித்தியாசமான கோணத்துடன் சூழல் பிரச்சினைகளை அணுகும் இந்த நிகழ்ச்சி நமது புதிய தலைமுறையில் ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 10:30க்கும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.