8 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது

8 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது
8 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது

 8 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்தநாளான 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, 21, 22, 23 அகிய தேதிகளில் கேள்வி நேரம் நடைப்பெற்றது. தொடர்ந்து நடந்து வரும் சட்டமன்ற கூட்ததில் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டம் கூடி நேரமில்லா நேரம் நடைபெற்றது. 8 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஈர நெஞ்சில் உருவானது தான் நம்மை காக்கும் 48 திட்டம் எனவும், 8 மாத கால திமுக ஆட்சியில் விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் மாடலை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார் என குறிப்பிட்ட அவர், மத்திய அமைச்சரே பாராட்டும் அளவுக்கு, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.