போதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்

போதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்

போதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்

 

மும்பை: 

பாலிவுட் நடிகைகள் தொடர்புடைய போதை பொருள் விவகாரத்தில், நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் பற்றி விவாதிக்கும் வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையின் போது பாலிவுட்டில் போதை பொருள் பயன்பாடு சகஜமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே சுஷாந்தின் காதலி ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்தின் மேலாளர், சமையலர் உட்பட ஒரு டஜன் ஆட்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலங்கள், வாட்ஸஅப் சாட்கள் மூலம் இவ்விவகாரம் பெரியளவில் விரிவடைந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனை ஆஜராக சொல்லி என்.சி.பி., சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு முன்னதாக ரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீபிகாவின் மேலாளர் கரீஷ்மா, திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரை விசாரித்தனர். ஜெயா ஷாவின் வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டு பார்த்த போது, போதை பொருள் பற்றி விவாதிக்க தனி குரூப் இருந்தது தெரிந்தது. அதன் அட்மின் தீபிகா படுகோன் என என்.சி.பி.,யிடம் ஜெயா ஷா கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.