தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைப்பு.!

தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைப்பு.!
தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைப்பு.!

தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நவம்பர் -2021, தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் வரும் நாட்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதால், 10.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கான புதிய தேர்வுக்கால அட்டவணை தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.