கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை

~மீரா கதாபத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்கும் இந்நெடுந்தொடர், மார்ச் 28 அன்று முதன்முறையாக கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பைத் தொடங்குகிறது ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு இது ஒளிபரப்பாகும். ~​

சென்னை: 21 மார்ச் 2022: காதல் கதையைச் சொல்லும் காவியங்களுக்கு எப்போதும் அழிவில்லை. மீராபாய்க்கும், கிருஷ்ணனுக்கும் இடையிலான காதல் கதையும், இத்தகைய அமரக் காவியங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. கடவுள் கிருஷ்ணன் மீது மீரா கொண்ட பக்திக்கு வரம்புகளே இல்லை. சமூக மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களை ஒதுக்கித் தள்ளிய மீராவின் தைரியமும், காதலும் தான் வரலாற்று நாயகிகளுள் ஒன்றாக அவரை ஆக்கியிருக்கிறது. இசைப்பாடல்களை எழுதிப் பாடுவதில் புகழ்பெற்ற மீராவின் காதல் கதையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சியான மீரா நெடுந்தொடர், மார்ச் 28, இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் மீராவாக பிரபல நடிகை குஷ்பூவும், கிருஷ்ணாவாக நடிகர் சுரேஷ் சந்திர மேனனும் நடிக்கின்றனர். காதல் மட்டுமின்றி, சோகமும், பிரிவும், கலந்த இந்நெடுந்தொடரைக் காண 2022 மார்ச் 28, திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் காணுங்கள்.  

கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன் எஸ். இந்நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடங்கப்பட்டதிலிருந்தே எமது பார்வையாளர்கள் மனதில் ஆழமான பதிவுகளை உருவாக்கும் அதே வேளையில், அவர்களின் மனங்களை ஒன்றவைக்கும் சிறப்பான கதைகளை உருவாக்கி நாங்கள் எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம். நமது சமூகத்தில் இன்றியமையாத அங்கமாகவும், நம் கலாச்சாரத்தில் அதிக மதிப்பிற்குரியவர்களாகவும் திகழும் பெண்களை நேர்மறையான பல்வேறு பரிமாணங்களில் சித்தரிக்க வேண்டுமென்ற எமது செயல்திட்டக் குறிக்கோளின்படி மீரா என்ற இந்நெடுந்தொடரை அறிமுகம் செய்வதில் கலர்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது. தைரியமும், செயல்திறனும் கொண்ட புதுமைப் பெண்களாக பெண்களது கதாபாத்திரங்களை உருவாக்குவதும் எமது நோக்கமாகும். விரைவில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் மீரா நெடுந்தொடர், சமத்துவம், சுயமதிப்பு, தற்சார்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை “பெண்ணியம்” என்ற வார்த்தைக்கே புதிய பொருள் வரையறையை தரப்போவது நிச்சயம். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண்கள் மட்டுமின்றி, அனைவரது

மனங்களையும் மீரா தன்வசப்படுத்துவாள் என்பது நிச்சயம். அத்துடன், கடந்த காலத்தில் பெண்களைப் பற்றிய கண்ணோட்டங்களை இந்நெடுந்தொடர் உறுதியாக மாற்றும்”

தேவி பாலாவின் திரைக்கதை மற்றும் ஜவஹர் இயக்கத்தில் நகர வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட மீரா நெடுந்தொடர், குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னுடைய சுயமதிப்பை கண்டுபிடிக்கின்ற ஒரு பெண்ணை நேர்த்தியாக சித்தரிக்கிறது. 16 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததற்குப் பிறகு தங்களது மகளின் திருமணத்தின்போது நேரில் சந்திக்கின்ற நடுத்தர வயது தம்பதியரான மீரா (நடிகை குஷ்பூ நடிப்பில்) மற்றும் கிருஷ்ணா (நடிகர் சுரேஷ் சந்திர மேனன் நடிப்பில்), ஆகியோரின் மறக்கப்பட்டுவிட்டு காதல் மற்றும் உறவு மீண்டும் துடிப்போடு மலர்வதைச் சுற்றி இக்கதை நகர்கிறது. திருமணமான தம்பதியர், பிரிந்து வாழமுடியும் என்றபோதிலும், பெற்றோர்களால் அவ்வாறு இருக்க இயலாது என்ற ஒரு கருத்தை இக்கதை முன்வைக்கிறது.  

தனது அம்மா மற்றும் மகளுடன் எளிய, ஆனால் அழகான வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வயதான ஒரு மகப்பேறு மருத்துவரான (Gynaecologist) மீரா மகளாக ஆதிரா (அக்ஷரா), ஒரு நேர்மையான நபர். ஆனால், தனது மனதிற்கு சரியென்று படும் விஷயங்களுக்காக தனது எண்ணங்களை ஒளிவுமறைவின்றி பேசவும், அவற்றிற்காக துணிவுடன் செயல்படவும் ஒருபோதும் தயங்கியதில்லை. தனது கொள்கைகள் மற்றும் நன்னெறிகள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட பெண்ணாக மீரா இருக்கையில், மனதளவில் தைரியமான நபராக இருந்தபோதிலும், எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய தனது குணத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்காத ஒரு இதயவியல் (Cardiologist) மருத்துவராக அவளது கணவரான கிருஷ்ணா இருக்கிறார். மீராவை விட்டு நகர்ந்து தனது வாழ்க்கையை தனித்து நடத்துபவராக வெளியில் காட்டிக்கொண்டாலும் கூட, இன்னும் மீராவை நினைத்து அவளது அன்புக்காக ஏங்குபவராகவே அவர் இருக்கிறார். நடிகை பூஜா லேகேஷ் (அஞ்சலி), நடிகை ஷாலினி (ஜோதி), நடிகை சாந்தி வில்லியம்ஸ் (ஜானகி – மீராவின் தாய்) மற்றும் நடிகை ‘பசி’ சத்யா (அன்னம் – தலைமை செவிலியர்) துணை கதாபாத்திரங்களாக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இதன் இயக்குனர் ஜவஹர் இதுதொடர்பாக கூறியதாவது: “குஷ்பூ போன்ற பிரபலமான, அற்புதமான நடிகை கதாநாயகியாக இடம்பெற்றிருக்கும் மீரா நெடுந்தொடரை இயக்குவது உண்மையிலேயே பெருமகிழ்ச்சி தருகிறது. இதில், நடித்திருக்கும் பிற நடிகர்களும், சிறப்பான திறமைசாலிகள். அதற்கும் மேலாக, குஷ்பூ அவர்களால் எழுதப்பட்ட கதையை திரை விருந்தாக உருவாக்குவது ஆனந்தமான ஒரு விஷயம். மனஉறுதி கொண்ட, தைரியமான மற்றும் அனைத்திற்கும் மேலாக சுயமரியாதையை உயர்வானதாக கருதும் ஒரு பெண்ணின் சக்தி வாய்ந்த பரிமாணத்தை மீராவின் மூலம் நாங்கள்

வெளிப்படுத்தும் ஒரு முயற்சியே மீரா நெடுந்தொடர். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் மீது தன்னம்பிக்கையின் தாக்கத்தை உருவாக்குவது எமது குறிக்கோள். குறிப்பாக, பெண்கள் அவர்களது கனவுகளுக்கும், விருப்பங்களுக்கும் முன்னுரிமை தருவதோடு, தங்களையே மதிக்க பழகிக்கொள்ள வேண்டுமென்பதே எமது நோக்கம். திருமணம் நெடுந்தொடருக்கு பிறகு மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பை தந்த கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சிக்கு நன்றி”.

மீரா நெடுந்தொடர் பற்றி நடிகை குஷ்பூ பேசுகையில், “இத்தொடர் மூலம் ஒரு முழு நேர எழுத்தாளராகவும் மற்றும் கருத்துருவாக்கம் செய்வதிலும் நான் பெருமை கொள்கிறேன், இதில் முதன்மை கதாபாத்திரத்தையும் ஏற்றிருப்பதால், இந்நிகழ்ச்சி எனக்கு நிகரற்ற உற்சாகத்தை தருகிறது. எனது கனவு செயல்திட்டங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறது. உறுதியான, சுதந்திரமான மற்றும் சுயசார்புள்ள ஒரு பெண்ணைச் சுற்றிய ஒரு கதையை தமிழ் தொலைக்காட்சி தளத்தில் சொல்ல வேண்டுமென்பது, நான் நீண்டகாலமாக விரும்பிய ஒரு விஷயம். மீரா நெடுந்தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திப் பார் உத்வேகம் பெறுவார்கள் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சுரேஷ் சந்திர மோகன், “நீண்ட காலத்திற்குப் பிறகு வயதிற்கு தகுந்த கதாபாத்திரத்தில், அதுவும் பெண்களின் துணிச்சலான பண்புகளை வலுவாக சித்தரிக்கும் அதே நேரத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள பிற கதாபாத்திரங்களையும் கொண்ட ஒரு சிறப்பான கதையில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் குஷ்பூ போன்ற மிகத்திறமையான நடிகையோடு இணைந்து நடிப்பதை நான் கௌரவமாகவே கருதுகிறேன். பார்வையாளர்களின் மனதிலும், இதயங்களிலும் இந்த நிகழ்ச்சி நிச்சயமாக தனக்கென ஒரு சிறந்த இடத்தை கைவசப்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம்.” என்று கூறினார்.

தனது சுய மதிப்பிற்கும் மற்றும் அவளது வாழ்க்கையின் காதல் கணவருக்குமிடையே சிக்கித் தவிக்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு பெண்ணின் ரொமான்ஸை கண்டு ரசிக்க 2022 மார்ச் 28, வரும் திங்கள் இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியைப் பாருங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.