தெற்கு ரயில்வே அறிவிப்பு செப். 7 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை

தெற்கு ரயில்வே அறிவிப்பு செப். 7 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை

சென்னையில் செப்டம்பர் 7-ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலங்களுக்குள் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவைகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவைகளை இயக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் வைத்ததை அடுத்து, ரயில் சேவை தொடங்குவதாகவும்,  பகுதி அளவு ரயில்களே இயக்கப்படும் என்றும், பிறகு படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.