“அரட்டை பிரிமியர் லீக்”

“அரட்டை பிரிமியர் லீக்”
“அரட்டை பிரிமியர் லீக்”
“அரட்டை பிரிமியர் லீக்”
“அரட்டை பிரிமியர் லீக்”
“அரட்டை பிரிமியர் லீக்”

“அரட்டை பிரிமியர் லீக்”

பரபரப்பான விளையாட்டு போட்டி குறித்த விவாதமும் வயிறு வலிக்க வைக்கும் சிரிப்பும் ஒரே நிகழ்ச்சியில் காணக்கிடைப்பது அரிது...அது போன்ற வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்குகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. அனல் பறக்க நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளை ‘அரட்டை பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கேலி, கிண்டலுடன் வழங்குகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. கிரிக்கெட் விமர்சகரும் ,பிரபல நகைச்சுவை தொகுப்பாளருளான பாஸ்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஆழமான அலசல்கள்...அன்லிமிட்டட் சிரிப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கிரிக்கெட் விமர்சகர்கள் சரவெடி விமர்சனங்களை முன்வைப்பர். போட்டிகள் அலசல், சிரிப்பு மட்டுமல்ல...கிரிக்கெட் சார்ந்த தொழில்நுட்பங்கள், சுவாரசியமான மைதான நிகழ்வுகள் போன்ற தகவல்களும் இந்நிகழ்ச்சியில் உண்டு. திரைத்துறை, ஜோதிடம் என பல்துறை நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் அன்றாடம் பங்கேற்கின்றனர். கிரிக்கெட் குறித்த கேள்விகளும் அதற்கான சரியான விடை கூறும் நேயர்களுக்கு பரிசும் உண்டு. அரட்டை பிரிமியர் லீக் என்ற இந்நிகழ்ச்சி தினசரி மாலை 6:00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.