இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசு
இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள் தனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு-தினா

இன்று பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கலைஞர்கள் சங்க தலைவர் தினா பேசியது......

இசை கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றிஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம் பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜாவழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கிற ஊடகங்களில் வருகிற செய்திகள் தவறானவை கோடம்பாக்கம், வடபழனி, சாலிக்கிராமம் என்பது சினிமாகாரர்கள் மட்டுமே இருந்து வந்த இடம்

அன்றைக்கு இருந்த பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை அவற்றை பராமரித்துபாதுகாக்க தவறிவிட்டோம் அனைத்தும் வணிகரீதியிலான கட்டிடங்களாக மாறிவிட்டன

கடந்த 45 ஆண்டு காலாமாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ முதல் நாள் மாலை ரிக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வழக்கம்போல சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டார் இது எட்டு மாத காலமாக நீடித்தது அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார்

நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதாரப்படுத்தபட்டிருந்தன

மத்திய, மாநில அரசுகள் வழங்கியவிருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன

45 ஆண்டுகாலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணியை செய்தவரை காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்

தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்கு தகவல் கூறி இருக்கலாம் இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இசைஞானி இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய மாநில அரசுகள் மௌனமாக வேடிக்கை பார்த்தது

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் புரட்சிதலைவி அம்மா அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம்

ஐம்பாதாண்டுகாலம் இந்திய சினிமாவுக்கு தன் இசை பணியால் சர்வதேச அளவில் கௌரவத்தை பெற்று தந்த இசைஞானி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தன்னை கௌரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இருப்பதாக இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார