“ஆடிப்பெருக்கும் அன்னபூரணி வழிபாடும்”
வாழ்வில் வளம் பல நல்கும் “ஆடிப்பெருக்கும் அன்னபூரணி வழிபாடும்”
ஆடி மாதம் முழுவதுமே ஆன்மீகச் சிறப்பு வாய்ந்தது என்றாலும் அம்மனுக்கு பிடித்தமான ஆடி-18ம் தேதியான ஆடிப்பெருக்கு அன்று அம்மனை வழிபட்டால் வாழ்வில் வளங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
உணவு தானிய செல்வம் பெருக்க ஆடிப் பெருக்கில் அம்மன் வழிபாடு விவசாயம் தழைக்க, பஞ்சமின்றி உணவு கிடைக்க, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓட, எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் யாவும் நிறைவேற, தீர்க்காயுளுடன் கூடிய இனிய இல்லற வாழ்வை அமைத்துக் கொள்ள என பல்வேறு வேண்டுதல்களுடன் அம்மனை வேண்டி வழிபடும் நாளாக இந்த நன்னாள் விளங்குகின்றது. தானிய வளங்களை அள்ளித் தரும் தாயாம் அன்னபூரணியையும், பூமிக்கே பிராட்டியாக விளங்கும் ஆண்டாளையும் ஆடிப் பெருக்கு நாளில் வணங்குவதன் மூலம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிட்டும் என்பது ஐதீகம்.
ஆடிப் பெருக்கும் அன்னபூரணி வழிபாடும்:
இந்த பிரபஞ்சத்திற்கே படியளக்கும் தாயாக அன்னை அன்னபூரணியை. ஆடிப்பெருக்கு நன்னாளில் வணங்கி வழிபட்டு அவளின் அருளாசியை பெற்று நீங்கள் சிறப்புடன் வாழ “ஆஸ்ட்ரோவேத்” கீழ்க்கண்ட ஹோமம் மற்றும் பூஜைகளை உங்களுக்கென்று பிரத்தியேகமாக நடத்தவிருக்கின்றது.
ஆகஸ்ட் 3, 2019 அன்று 3 ஆலயங்களில் அன்னை அன்னபூர்னேஸ்வரிக்கு அர்ச்சனை பூஜையும், 3 புரோகிதர்களைக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி ஹோமமும், இதே தேதியில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் அன்னை ஆண்டாளுக்கு அர்ச்சனை பூஜையும் நடைபெற உள்ளது.
இந்த பிரம்மாண்ட ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொண்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழுங்கள்.
ஆஸ்ட்ரோவேதின் இணைய தொலைக்காடசி மூலம் இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையிலும் நீங்கள் காணலாம்
நாள் : 03-08-2019
இடம் : ஆஸ்ட்ரோவேத், 27/108, முதல் தெரு , அம்பத்தூர் தொழில்பேட்டை
சென்னை 600 058
மேலும்விவரங்களுக்கு: www.astroved.com மற்றும் அழையுங்கள் +91 95004 95008