காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைத்தையும் கடந்து வந்த சென்னை அணி அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அணியின் இளம் வீரர்களிடம் போதுமான உத்வேகம் இல்லை என சென்னை கேப்டன் டோனி கூறியிருந்ததும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுகிறார். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் சொந்த நாட்டுககுச் செல்ல உள்ளார்” என்று தெரிவித்தார்.

கரீபியன் லீக் தொடரிலிலிருந்தே காயத்தால் பிராவோ அவதிப்பட்டு வந்தார். காயம் காரணமாகவே சென்னை அணியின் முதல் 3 போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பிராவோ அணியில் இடம்பெற்று வந்தார்.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடைசி ஓவரை பிராவோ வீச முடியவில்லை. இதனால் கடைசி ஓவரை ஜடேஜா வீசவேண்டிய சூழலில் அதுவே டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா, ஹர்பஜன் இருவரும் போட்டியிலிருந்து விலகிவிட்ட நிலையில் பிராவோவும் விலகியது, சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.