அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்தில் சிக்கியது.. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு கிளம்பிய இந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது.

அந்த விமானம் 1.10 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட வேண்டியது. அது ஏழு நிமிடங்கள் தாமதமாக 1.17 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது. கிளம்பிய சிறிது நேரத்தில் அது அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே விமானத்தில் மொத்தம் 230 பயணிகள் இருந்தனர். மொத்தம் 217 பெரியவர்கள், 11 குழந்தைகள், 2 கைக்குழந்தைகள் என மொத்தம் 230 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 169 இந்திய நாட்டை சேர்ந்தவர்களாகும். மேலும், விமானத்தில் இருந்தவர்களில் 53 பிரிட்டிஷ் நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 12 விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்