நடிகரும், டைரக்டருமான ஈ. ராம்தாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நடிகரும், டைரக்டருமான  ஈ. ராம்தாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நடிகரும், டைரக்டருமான ஈ. ராம்தாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நடிகரும், டைரக்டருமான ஈ. ராம்தாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். மோகன்-சீதா நடித்த கோவை தம்பியின் ' ஆயிரம் பூக்கள் மலரட்டும் ', ராமராஜன்-கௌதமி நடித்த 'ராஜா ராஜாதான்' 'உட்பட ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களுக்கு கதை-வசனம் எழுதி இருக்கிறார். ' விக்ரம் வேதா ', 'விசாரணை' உட்பட ஏராளமான படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அனைவரிடமும் உரிமையோடு, எளிமையாகப் பழகக்கூடியவர். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் ஆஸ்திரேலியாவிலும், இளைய மகன் சென்னையிலும் நல்ல பணியில் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!