‘செம ருசி..சமையல் ஈஸி’

‘செம ருசி..சமையல் ஈஸி’
‘செம ருசி..சமையல் ஈஸி’
‘செம ருசி..சமையல் ஈஸி’
‘செம ருசி..சமையல் ஈஸி’

‘செம ருசி..சமையல் ஈஸி’

 

 

 

பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது என்று தெரியும்.. அந்தவகையில் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சியாக ‘செம ருசி..சமையல் ஈஸி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

 

 

 

பெப்பர்ஸ் டிவியில் செவ்வாய்கிழமை தோறும் பிற்பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தப்போவது பிரபல நட்சத்திர ஹோட்டலின் செப் ஆன கலைச்செல்வன் என்பவர் தான். 

 

 

 

இந்த துறையில் சுமார் 19வருடங்களாக பிரபலமாக விளங்கும் கலைச்செல்வன் பல நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். சிறந்த சமையற்கலைஞர் என பல விருதுகளையும் பெற்றவர். இந்த நிகழ்ச்சி மூலம் தான் கற்றுக்கொண்ட சமையற்கலை நுணுக்கங்களையும், அன்றாட சமையலில் நாம் உண்ணும் உணவுகளையே எப்படி விதம்விதமாக மாற்றி சமைப்பது என்கிற கலையையும் கற்றுத்தர இருக்கிறார். குறிப்பாக சொல்லப்போனால் உள்ளூர் வத்தக்குழம்பு முதல் வெளிநாட்டு உணவு வகை முதற்கொண்டு இந்த நிகழ்ச்சியில் இவர் செய்து காட்ட இருக்கிறார்.