சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் பற்றி முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் பற்றி முதல்வர் பழனிசாமி  விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.  அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், சென்னை - சேலம் இடையேயான 8 வழிச் சாலை திடட்ம் சேலத்துக்காக மட்டும் அமைக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது. அதோடு, இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால் நல்லதொரு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், உழவர் உதவித் தொகை திட்ட மோசடி குறித்த கேள்விக்கு, உழவர் உதவித் தொகை திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த மோசடி குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் குற்றங்கள் மறைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் குற்றங்கள் மறைக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத்தில் நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையை அரசு ஒருபோதும் மறைக்கவில்லை என்று கூறினார் முதல்வர் பழனிசாமி.