4 ஆண்டுகளுக்கு பின், இந்திய துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200

4 ஆண்டுகளுக்கு பின், இந்திய துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இதுவரை நான்கு சதம் அடித்துள்ளார். இதில் 3 சதம் 6வது இடத்தில் களமிறங்கி அடிக்கப்பட்டன. ஒரு சதம் நேற்று தொடக்க வீரராக அடித்தார். இவை அனைத்தும் இந்தியாவில் அடிக்கப்பட்டது.

இவரின் அதிகபட்சம் 177 ரன்கள். ஆனால் வெளிநாட்டில் இவரது அதிகபட்சம் 79 ரன்கள் மட்டுமே. ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 202 ரன் சேர்த்து அவுட்டாகாமல் உள்ளது.

இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பின், இந்திய துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்துள்ளது. இதற்குமுன் 2015ல் பதுல்லாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தவான், முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 283 ரன் சேர்த்திருந்தது. காம்பிர்-சேவாக் 218 ரன்கள், வாசிம் ஜாபர்-சேவாக் 213 ரன்கள், சேவாக் – டிராவிட் 413 ரன்கள் இந்த இலக்கை அடைந்திருந்தது.